Paneer Burger Recipe : குழந்தைகளுக்கு பிடித்த பர்கர்.. இனி வீட்டிலே செய்யலாம்!
தவா பர்கர் செய்ய தேவையான பொருட்கள் : பர்கர் பன், வெண்ணெய், பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை குடைமிளகாய் - 1 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, பன்னீர் - 200 கிராம், மோஸ்ரெல்லா சீஸ் - 1 கப் துருவியது, பூண்டு - 2 பற்கள் நறுக்கியது, இஞ்சி - 1 சிறிய துண்டு நறுக்கியது, சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, செஸ்வான் சாஸ் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை விளக்கம் : கடாயில் வெண்ணையை சூடாக்கி, இதில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை குடைமிளகாய், தக்காளி சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் கிண்டவும். இதில் உப்பு, சாட் மசாலா தூள், செஸ்வான் சாஸ் சேர்த்து கிண்டவும்.
. மசாலா நன்கு கலந்ததும், இதில் பன்னீர் மற்றும் மோஸ்ரெல்லா சீஸ் சேர்த்து கிளறவும். கடைசியாக இதில் கொத்தமல்லி இலை சேர்த்து கிண்டவும்.
பர்கர் பன்னை லைட்டாக ஸ்லைஸ் செய்யவும். இதற்குள் செய்த பன்னீர் கலவையை வைத்து இறுக்கமாக அழுத்தவும்.
தோசை தவாவில் வெண்ணெய், பெரிய வெங்காயம், சாட் மசாலா தூள், கொத்தமல்லி இலை, மோஸ்ரெல்லா சீஸ் செஸ்வான் சாஸை ஊற்றி, பர்க்கரின் ஓரத்தில் ஒட்டும் படி ரோல் செய்யவும். அவ்வளவுதான் அருமையான இந்த பர்க்கரை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -