Cutting Off Sugar : சர்க்கரைக்கு நோ சொல்லுங்க- என்ன ஆகும் தெரியுமா? நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
. இருப்பினும் நேரடியாக ஜீனி, சர்க்கரை, வெல்லம், தேன், கரும்பு, அதிக இனிப்பு கொண்ட பழங்கள், இனிப்பு பண்டங்கள், கார்பனேடட் ட்ரிங்க்ஸில் கிடைக்கும் சர்க்கரையை நாம் தவிர்க்கலாம். அவ்வாறாக ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று விவரிக்கிறார் டாக்டர் அம்ரிதா கோஷ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசர்க்கரை அதிக கலோரி கொண்ட உணவுப் பொருள் என்பதால் இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதனால் சர்க்கரையை உணவில் தவிர்க்க ஆரம்பித்தால் உடல் எடை குறையும். அதிக சர்க்கரை டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. அதனால் சர்க்கரையை தவிர்க்கும்போது உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது
ஒரு மாதம் இதை நீங்கள் பரிசோதித்து பார்க்கும் போது உடலில் சக்தி அதிகரிப்பதை நீங்களே உணர்வீர்கள். சர்க்கரையை தவிர்க்கும் போது உடல் நாள் முழுவதும் உற்சாகம் கொள்ளும். விழிப்புடன் இயங்குவதை நீங்களே உணர்வீர்கள். உங்கள் மனநிலையில் நல்ல மாற்றம் தெரியும். மூட் ஸ்விங்ஸ் பாதிப்புகள் குறையும்
ரீஃபைண்ட் சர்க்கரை இதய நோய்க்கும் வழி வகுக்கும் என்பதால் சர்க்கரையைத் தவிர்ப்பது இதயத்திற்கும் நலம் சேர்க்கும். அதேபோல் சர்க்கரை நேரடியாக ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும், உயர் கொலஸ்ட்ராலையும் ஊக்குவிக்கும். இவையெல்லாம் இதயத்திற்கு ஆபத்தானது.
சர்க்கரை என்பதே நம் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்புதான். நீங்கள் எடை அதிகம் கொண்டவராக இருந்தால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடையில், 5% மாவது குறைத்துவிடுங்கள்.
அதிக நார்ச்சத்து, குறைந்த ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சர்க்கரை கொண்ட உணவை உட்கொள்ளுங்கள். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இப்படி லைஃப்ஸ்டைலை மாற்றிவிட்டால் சர்க்கரையை தள்ளிவைக்கலாம்.
கேரளத்து மட்டை அரிசியைப் பயன்படுத்தலாம். கேரளாவின் பாலக்காட்டில் விளையும் இந்த அரிசி மட்டா அரிசி, ரோஸ்மட்டா, பாலக்காடன் மட்டா அரிசி, கேரள சிவப்பு அரிசி, சிவப்பு அரிசி என்றெல்லாம் அறியப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -