Cutting Off Sugar : ஒரு மாதம் முழுக்க உணவில் சர்க்கரையே சேர்க்காமல் இருந்தால், என்ன ஆகும் தெரியுமா?
அவ்வாறாக ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று விவரிக்கிறார் டாக்டர் அம்ரிதா கோஷ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசர்க்கரை அதிக கலோரி கொண்ட உணவுப் பொருள் என்பதால் இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதனால் சர்க்கரையை உணவில் தவிர்க்க ஆரம்பித்தால் உடல் எடை குறையும்.
அதிக சர்க்கரை டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. அதனால் சர்க்கரையை தவிர்க்கும்போது உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. ஒரு மாதம் இதை நீங்கள் பரிசோதித்து பார்க்கும் போது உடலில் சக்தி அதிகரிப்பதை நீங்களே உணர்வீர்கள்.
சர்க்கரையை தவிர்க்கும் போது உடல் நாள் முழுவதும் உற்சாகம் கொள்ளும். விழிப்புடன் இயங்குவதை நீங்களே உணர்வீர்கள். உங்கள் மனநிலையில் நல்ல மாற்றம் தெரியும்.
சர்க்கரை நேரடியாக ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும், உயர் கொலஸ்ட்ராலையும் ஊக்குவிக்கும். இவையெல்லாம் இதயத்திற்கு ஆபத்தானது. ஆகையால் ஒருமாதம் சர்க்கரையை தவிர்த்தால் உங்கள் உடலில் பல்வேறு நன்மைகளை நீங்கள் உணர முடியும்.
அதிக நார்ச்சத்து, குறைந்த ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சர்க்கரை கொண்ட உணவை உட்கொள்ளுங்கள். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இப்படி லைஃப்ஸ்டைலை மாற்றிவிட்டால் சர்க்கரையை தள்ளிவைக்கலாம்.
லோ க்ளைசிமிக் இண்டக்ஸ் கொண்ட பழங்களையும், நிறைய காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் உறுதி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -