Weekend Trip: நீங்கள் காணத்தக்க ஐந்து முக்கிய சுற்றுலா தளங்கள் - புகைப்படத் தொகுப்பு
இன்றைய இயந்திர வாழ்க்கைச் சூழலில் சுற்றுலா முக்கியமான அங்கமாக விளங்குகிறது. அதுவும் வாரவிடுமுறை நாட்களில் பல இடங்களை சுற்றிப் பார்ப்பது அனைவராலும் விரும்பப்படுகிறது. இந்தியாவில், நீங்கள் காணத்தக்க முக்கிய சுற்றுலா தலங்களை இங்கே காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜெய்ப்பூர் இந்தியாவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது தில்லி மற்றும் ஆக்ராவுடன் (240 கி.மீ. 149 மைல்) மேற்கு தங்க முக்கோண சுற்றுலா சுற்று வட்டத்தின் ஒரு பகுதியாக இணைந்துள்ளது. இது ஐந்தர் மந்தர் மற்றும் அமர் கோட்டை என இரண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களை கொண்டுள்ளது.
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்'நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும் இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 15ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று.
குதுப் மினார் தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் குதுப் வளாகத்தில் அமைந்துள்ளது. தில்லி சுல்தானகத்தின் நிறுவனர் ஸ்லேவ் வம்சத்தைச் சேர்ந்த குதுப்-உத்தின் ஐபக் என்பவரால் இது கட்டப்பட்டது. குதுப் மினாரின் முதல் மாடியை 1192 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். 1220 ல் ஐபக்கின் வாரிசும் மருமகனுமான இல்டுமிஷ் அதன் அடுத்த மூன்று மாடிகளை கட்டி முடித்தார்
வாரணாசி சூடான நாட்கள் மற்றும் குளிர்ந்த இரவுகளை கொண்டுள்ளது. இமயமலைப் பகுதியிலிருந்து வரும் குளிர் அலைகள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்தில் நகரம் முழுவதும் வெப்பநிலை குறைந்து 5 செண்டிக்கிரேட்டுக்கும் குறைவான வெப்பநிலைக்கு செல்லும் செல்லும்.
ஆக்ரா ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். ஏனெனில் அதன் பல முகலாய கால கட்டடங்கள், குறிப்பாக தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை மற்றும் ஃபதேபூர் சிக்ரி, இவை அனைத்தும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -