Gut Health : குடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க இதை கட்டாயம் பின்பற்றுங்க!
அனுஷ் ச | 10 Jul 2024 01:29 PM (IST)
1
வாழைப்பழம், வெங்காயம் போன்ற ப்ரீபயோடிக் நிறைத்த உணவுகளை தேர்தெடுக்கவும். இவை உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாவை உற்பத்தி செய்யும்.
2
ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு காய்கறியை சாப்பிட வேண்டும். அதனோடு ஏதேனும் ஒரு கீரை வகையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
3
சாதாரண வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதை குறைத்துவிட்டு நார்ச்சத்து நிறைத்த பழுப்பு அரிசி சாதம் சாப்பிடுங்கள்.
4
குளிர் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் இவை உடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியை தடுக்கலாம்.
5
புகை பிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை கட்டாயம் தவிர்க்கவும். இவை குடலில் உள்ள நுண்ணுயிரிகளை பாதிக்கலாம்.
6
மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அது உடலை பாதிக்கக்கூடிய நெஞ்செரிச்சல் மற்றும் குடற்புண்ணை உண்டாக்கலாம்.