Thari Kanji : உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான தரி கஞ்சி.. இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : நெய் - 1 தேக்கரண்டி, ரவை - 1/2 கப், தண்ணீர் - 1 1/2 கப், காய்ச்சிய பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1/2 கப் , உப்பு - 1 சிட்டிகை , ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, நெய், முந்திரி , சின்ன வெங்காயம் , திராட்சை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் ரவையை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுக்கவும்.
அடுத்தது, தண்ணீர் சேர்த்து ரவையை வேகவைக்கவும். அதன் பிறகு பால் சேர்த்து ரவையை கிளறி விடவும்.
அதன்பிறகு, ரவை கட்டி ஆகாமல் மீதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும். அடுத்தது சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
பானில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, சின்ன வெங்காயம், திராட்சை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சையை கஞ்சியில் சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சுவையான தரி கஞ்சி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -