Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Health Tips: மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? நன்மைகள் தருமா..? ஊட்டச்த்து நிபுணர் விளக்கம்..!
சில சூழ்நிலைகளில் எடை குறைப்பதில் கூட பங்களிக்கிறது. முதல் விஷயம், அதிகமான பழங்களை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், ஆனால் அது ஆசையாக மட்டுமே இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரண்டாவது அதிகமான பழங்கள் உண்பதால் உடல் எடை கூடுவது இல்லை, நம் உழைப்பை மீறிய, நம் உடல் செயல்பாட்டை மீறிய அளவுக்கு சாப்பிடுகிறோம் என்பதுதான் பொருள். அதற்கு மாம்பழம் அல்ல,
நார்ச்சத்தை பாதுகாக்க, பழங்களை சாப்பிடுங்கள், ஜூஸாக எடுக்க வேண்டாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறார். உங்கள் உடல் முழுமையாக ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும்.
மாம்பழங்கள் உங்களுக்கு இயற்கையான ஆற்றலைத் தருவதோடு, உங்கள் உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கும். எனவே ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, உங்கள் பசியைப் பூர்த்தி செய்ய ஒரு கிண்ணம் மாம்பழத்தைத் சாப்பிடலாம்.
அது மட்டுமல்ல. மாம்பழங்களில் ஒப்பீட்டளவில் அதிக அளவு இயற்கை சர்க்கரை உள்ளது. இருப்பினும், மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவும்
குறிப்பாக உடல் எடையை குறைக்கும் டயட்டில் மாம்பழத்தை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -