Drumstick Paratha Recipe : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முருங்கைக்காய் பராத்தாவை செய்து சாப்பிடுங்க!
முருங்கை மரத்தில் இருக்கும் முருங்கை இலை, முருங்கைக்காயில் பல நன்மைகள் நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த பருவ மழை காலத்தில் மழையும், வெயிலும் மாறி மாறி வந்து பல நோய்களை பரப்பி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் திண்டாடி வருபவர்களை வலுப்படுத்த உதவும் முருங்கைக்காய் பராத்தாவின் செய்முறை விளக்கத்தை பார்ப்போம்..
முதலில், முருங்கைக்காயை மசிக்கும் அளவிற்கு வேகவைக்க வேண்டும். பின், இதில் இருக்கும் சாற்றை நன்றாக பிழித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், பெருங்காயம், எள்ளு, கொத்தமல்லி, கோதுமை மாவு, எண்ணெய் ஆகியவற்றை தேவையான அளவிற்கு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவை சப்பாத்தியை போல் உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான தோசை கல்லில் இந்த பராத்தாவை லேசாக எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் ஆரோக்கியமான முருங்கைக்காய் பராத்தா தயார்.
குருமா, பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் மசாலா ஆகியவை இதற்கு பொறுத்தமாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -