Washing Machine Maintenance : வாஷிங் மெஷின் நீண்ட நாள் உழைக்க இந்த டிப்ஸை பின்பற்றுங்க!
பலமுறை வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும் போது துணிகளில் உள்ள அழுக்குகள் ட்ரம்மில் படிந்துவிடுகின்றன. அதனை சுத்தம் செய்ய சில வழிகள் உள்ளன
படியும் அழுக்குகள் நாளடைவில் பாக்டீரியாவாக மாறிவிடும். அதனை சுத்தும் செய்ய சோப்பு பெட்டியில் 1/2 கப் டிடர்ஜென்ட் பவுடர் கொண்டு நிரப்பி எம்டியாக மெஷினை இயக்கவும். இப்படி செய்தால் கறைகள் நீங்கிவிடும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுட வைத்து எடுத்து கொள்ளவும். அந்த தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து காட்டன் துணியால் அழுக்கு இருக்கும் இடத்தில் துடைத்தால் வாஷிங் மெஷினில் உள்ள கறைகள் நீங்கும்.
வீட்டில் உள்ள பேக்கிங் சோடா மற்றும் வினிகரை ஒரு கப்பில் சேர்த்து பேஸ்ட் போல எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு மெஷினில் கறைகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்யவும். ஒரு ஸ்க்ரப்பர் அல்லது நாரை தண்ணீரில் நினைத்து நன்கு தேய்த்தால் மெஷின் பளபளப்பாக ஜொலிக்கும்.
எலுமிச்சையை பிழிந்து சாறாக எடுத்து எடுக்கொள்ளவும். அதன் சாரையை அரை ஸ்பூன் பாக்கிங் சோடாவுடன் சேர்த்து வாஷிங் மெஷின் ட்ரம்மில் தடவி, எம்ட்டி வாஷ் செய்தால் ட்ரம் பிரகாசிக்கும்.
வாஷிங் மெஷினில் கவனிக்க வேண்டிய விஷயம், பவுடர் டிரே. நாம் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் அல்லது லிக்விட் ஊத்தும் ட்ரேவை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அந்த ட்ரேவை கழட்டி நார் கொண்டு சுத்தம் செய்வது அவசியம்