Chettinadu Pepper Chicken : காரசாரமான செட்டிநாடு பெப்பர் சிக்கன்.. இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : 250 கிராம் எலும்பு இல்லாத கோழி துண்டுகள், கறிவேப்பிலை, 2 டீஸ்பூன் எண்ணெய், கொஞ்சம் கடுகு, 1/4 டீஸ்பூன் பெருஞ்சீரகம், அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 வெங்காயம், கொஞ்சம் தக்காளி விழுது, 1 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரண்டி தனியா, 2 காய்ந்த மிளகாய்,1 தேக்கரண்டி கருப்பு மிளகு, 3 இலவங்கப்பட்டை, 3 ஏலக்காய்.
செய்முறை: ஒரு கடாயை அடுப்பில் வைத்து சீரகம், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், இலவங்கப்பட்டை, மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை எண்ணெய் ஊற்றாமல் வறுத்து அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும். பின் அதனோடு, அரைத்து வைத்த மசாலா சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
அடுத்து, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும். பச்சை மனம் போன பிறகு, அரைத்து வைத்த தக்காளி சாறை சேர்க்கவும்.
இப்போது, கழுவி வைத்துள்ள சிக்கனை மசாலா கலவையுடன் சேர்க்கவும். நன்கு மசாலாவுடன் சேர்த்து கிளறிவிடவும். ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து சிக்கனை மூடி வைத்து, சிறு தீயில் 15 - 20 நிமிடம் வரை வேக வைக்கவும்.
இது சற்று தண்ணீயாக இருந்தால், கிரேவியாக மாறும் வரை காத்திருக்கவும். கடைசியாக லேசாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி!