உங்கள் வீட்டில் எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் இருக்க சில டிப்ஸ்!
மணி ப்ளான்ட், வைத்திருப்பவர்களுக்கு பாசிட்டிவ் ஆற்றலையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. வீட்டிற்குள் உள்ள ஒளியில் செழித்து வளரக்கூடிய செடிதான் இது, இதற்கு அடிக்கடி நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. மேலும் இந்த செடியின் இருப்பு மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிரைவாக வளரும் இந்த கொடிகள் குறைந்த பராமரிப்பிலேயே செழித்து வளர்கின்றன. மென்மையான, இதய வடிவிலான இலைகள் திருமண வாழ்விற்கு வழுவகுப்பதாக நம்பப்படுகிறது.
போத்தோஸ் செடிகள் சிறந்த காற்று சுத்திகரிப்பான்களாக செயல்படுகின்றன. சமையலறை அலமாரி அல்லது குளியலறை போன்ற உங்கள் வீட்டின் மூலைகளுக்கு ஏற்ற செடி இது.
ஜேட் தாவரங்கள் வட்டமான இலைகளை கொண்டுள்ளதால், அதிர்ஷ்டத்தை தரும் செடியாக உள்ளன. வெயில் பகுதியில் செழித்து வளரும் பண்பைக் கொண்டிருப்பதால், குறைந்த நீர் பராமரிப்பு இருந்தால் போதும். வெயில் படரும் பிரகாசமான ஜன்னல்களில் வைத்தால் நன்றாக வளரும்.
வறட்சியில் எளிதில் வாடிவிடும் குணம் கொண்டது. ஆனால் நன்றாக பார்த்துக்கொண்டால் இதனால் கிடைக்கும் நன்மைகள் பல. இவை சுற்றி இருக்கும் காற்றை சுத்திகரிக்கும் சிறந்த செடியாகவும் அறியப்படுகிறது.
விரைவாக வளரும் அதிர்ஷ்ட மூங்கில் செடி பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்து, நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுவதாக நம்பப்படுகிறது. அலுவலகங்களை அலங்கரிக்க சிறந்த தேர்வாகும். குறைந்த ஒளியில் செழித்து வளரும்.
ஸ்னேக் பிளான்ட்கள் மிகவும் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்றாகும். இவற்றின் இலைகள் பாம்புகளின் தோலைப் போல இருப்பதால் ஸ்னேக் பிளான்ட் எனப் பெயரிடப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -