Health: நெய், பால் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?
ஊட்டச்சத்து நிபுணர்கள். நெய் மற்றும் பால் சேர்த்து சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் பெரிய விஷயம் ஆகும்.
தினமும் நெய்யை கொஞ்சமாக உட்கொள்வது உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை மற்ற உணவுகளில் இருந்து எளிதாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல், பால் உங்கள் உடலில் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவுகிறது.
நெய் மற்றும் பால் செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுவதற்கு ஒத்துழைத்து. உடலில் உள்ள சிக்கலான உணவுத் துகள்களை உடைக்க உதவுகிறது. இந்த கலவையானது செரிமானத்தை துரிதப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
பாலில் நெய் சேர்வதால் அதிலுள்ள அமிலத்தன்மை குறையும். இது செரிமான அமைப்பில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடல் ஆற்றலை மீட்டெடுக்கிறது.
நெய் ஒரு இயற்கை மசகு எண்ணெய் போல செயல்பட்டு, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதற்கிடையில், பாலில் கால்சியம் உள்ளது,