Indoor plants: வீட்டிற்குள் செடி வைக்க விரும்புகிறீர்களா… இதைப் படிங்க!
பார்லர் பாம் எனப்படும் இந்த தாவரங்கள் டைனிங் அரை அல்லது ஹாலில் வைக்கக்கூடிய பசுமையான தாவரங்கள் ஆகும். இந்த தாவரங்கள் குறைந்த வெளிச்சத்தில் வளரும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபீஸ் லில்லிகள் குறைந்த அல்லது சுமாரான வெளிச்சத்தில் நன்றாக வளரும். இவற்றிற்கு பூக்கள் பூக்க மட்டுமே சூரிய ஒளி தேவை. குறைந்த ஒளியில் கூட பூக்கள் பூத்துவிடும். ஆனால் குறைவாக பூக்கும். இருப்பினும் இதனை வீட்டிற்குள் வைக்க வேண்டிய காரணம், இவை காற்றை சுத்திகரிக்கும் திறன் பெற்றவை என்பதுதான்.
பீகாக் பிளான்ட், கதீட்ரல் விண்டோஸ், ரேட்டில் ஸ்னேக் பிளான்ட், மற்றும் ஜீப்ரா பிளான்ட் என பல பெயர்களில் அறியப்படுகிறது. மயிலின் இறகுகளை போன்ற இலைகள் இருப்பதால் இந்த தாவரம் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது.
பெப்பரோமியா என்பது பொதுவாக மேசைகளில் வைக்கப்படும் சிறிய தாவரங்கள் ஆகும். சுமார் 1000 வகையான பெப்பரோமியாக்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படுகின்றன.
ஸ்னேக் பிளான்ட்கள் மிகவும் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்றாகும். இவற்றின் இலைகள் பாம்புகளின் தோலைப் போல இருப்பதால் ஸ்னேக் பிளான்ட் எனப் பெயரிடப்பட்டது.
ஸ்பைடர் பிளாண்ட்கள் நீளமான, மெல்லிய இலைகளைக் கொண்டிருக்கின்றன. அவை அவற்றின் வேர்களிலிருந்து நீண்டு சிலந்திக் கால்களைப் போல தோற்றமளிக்கின்றன.
ZZ தாவரங்கள் சிறியவை ஆனால் இயற்கையில் வலிமையானவை. ZZ பிரகாசமான ஒளி, மிகக் குறைந்த ஒளி என இரண்டிலும் சிறப்பாக வளரும். இது சிறிய அல்லது இயற்கை ஒளி இல்லாத இடங்களை கூட தாங்கி நிற்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -