Soft Chapathi : சப்பாத்தியும், ரொட்டியும் இனிமே பஞ்சு மாதிரி இருக்கும்.. இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..
சப்பாத்தி மாவு பிசைய வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துங்கள். இதுதான் மாவு மிருதுவாக வர முதல் ஸ்டெப். அதேபோல் மாவை கையில் ஒட்டும் பதத்தில் அல்லாமல் பிசைய வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநன்றாக ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதை உருண்டையாக்கும் போது விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மாவை பதமாக பிசைந்துள்ளீர்களா என்பது உருண்டையை திரட்டும்போது தெரிந்துவிடும்.
உருண்டை எவ்வித விரிசலும் இல்லாமல் வந்தால் உங்கள் மாவு பதமாக இருக்கிறது என்று அர்த்தம். சப்பாத்தி 5 முதல் 7 இன்ச் விட்டத்தில் வருவதுபோலவும் ஒன்றரை முதல் இரண்டரை மில்லி மீட்டர் தடிமன் இருப்பது போலவும் தேய்த்துக் கொள்ளுங்கள்.
மாவு பிசையும் பதம், சப்பாத்தியை தேய்க்கும் விதம் எல்லாம் முக்கியம் தான். ஆனால் அதற்கெல்லாம் அடிப்படை கோதுமை மாவு. நல்ல நயமான சுத்தமான ஃப்ரெஷ்ஷான மாவு தான் உங்கள் சப்பாத்திக்கு மற்ற எல்லா பண்பையும் தரும்
சப்பாத்தியை இடும்போது எண்ணெய்குப் பதில் நெய் பயன்படுத்துங்கள். இது மிகவும் முக்கியமானது. சப்பாத்தி தேய்க்கும் பலகையில் கொஞ்சம் நெய் தேய்த்துக் கொள்ளுங்கள்.
சப்பாத்தி நன்றாக வேக விட வேண்டும். அதே நேரத்தில் தீயையும் கவனமாகக் கையாள வேண்டும். சப்பாத்தியை இடுவதற்கு முன் பேன் நன்றாக சூடாகியிருக்க வேண்டும். 160 முதல் 180 டிகிரி வரை பேன் சூடாகியிருக்க வேண்டும். இந்தச் சூட்டில் இருக்கும் கல்லின் மீது சப்பாத்தியைப் போட்ட பின்னர் அது 10 முதல் 15 விநாடிகள் ஒருபுறம் வேக வேண்டும். மறுபுறம் திருப்பியவுடன் அது 30 முதல் 40 விநாடிகள் வேக வேண்டும். இந்த நேரம் கொடுத்தால் தான் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -