Ginger chutney: செரிமான சக்தியை மேம்படுத்த உதவும் இஞ்சி சட்னி ...செய்முறை இதோ....
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெங்காயம் பாதியளவு வதங்கியவுடன், அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்க வேண்டும்.இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு, ஆற வைக்க வேண்டும்.
ஆறிய அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்தால் சுவையான இஞ்சி சட்னி தயார்.இதை இட்லி, தோசை, தயிர் சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்டவற்றுடன் வைத்து சாப்பிட்டலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -