Garlic Chutney: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடிஷ்! பூண்டு சட்னி ரெசிபி!
முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு 100 கிராம் பூண்டு பற்களை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎண்ணெய் காய்ந்ததும் அதில் பத்து வரமிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும். (மிளகாய்கள் நிறம் மாறி விடக்கூடாது )இதனுடன் நிறத்திற்காக மூன்று காஷ்மீரி மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். வறுபட்ட மிளகாயை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முழு தக்காளி பழத்தை அதன் அடிப்பகுதியில் லேசாக கீறி முழு பழமாக எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் நன்றாக சுறுண்டு வதங்கி வர வேண்டும். சாறு அப்பொழுது தான் நமக்கு அதே சுவையில் அப்படியே கிடைக்கும்.
பின்னர் அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வதக்கிய பூண்டு, வறுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் தக்காளி பழங்களை மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து இதனுடன் சேர்த்தால் போதும். சுவையான பூண்டு சட்னி தயார். இதை நீங்கள் இட்லி, தோசை உடன் வைத்து சாப்பிடலாம். மிகவும் நன்றாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -