Masala Omlette recipe : மசாலா ஆம்லெட்டில் வால்நட்டா? இதோ இந்த புதிய முட்டை ரெசிபியை செய்து பாருங்க!
ரெகுலரான ஆம்லெட் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா..? இதோ இந்த சத்தான சுவையான மசாலா ஆம்லெட்டை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்: முட்டை - 6, வால்நட் - 1/2 கப் நறுக்கியது, வெங்காயம் - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது, பூண்டு - பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி இலை - நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, வால்நட் சேர்த்து, அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊறவிடவும்.
வேறொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அதை ஊறவைத்த மசாலா கலவையில் ஊற்றி நன்றாக கலந்துவிடவும்.
அதன் பிறகு ஒரு தவாவில், எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி முட்டை மசாலாவை ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மறுபக்கம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.