Chicken Tenders recipe: இனி சிக்கன் சாப்பிட காஸ்ட்லியான கடைகளுக்கு செல்ல வேண்டாம்..இதோ இந்த சிக்கன் டெண்டர் ரெசிபியை வீட்டில் செய்து அசத்துங்க!
ஃப்ரைடு சிக்கன் பிரியரா நீங்கள்? இனி ஃப்ரைடு சிக்கன் சாப்பிட கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய சிக்கன் டெண்டரை வீட்டில் செய்து அசத்துங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம் வால்நட் - 1/2 கப் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, இட்டாலியன் சீசனிங் - 1 1/2 தேக்கரண்டி, எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, பிரட் - 1 துண்டு நறுக்கியது சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, சோளமாவு - 1/4 கப், மைதா - 1/4 கப், தண்ணீர் எண்ணெய் தேவையான அளவு
செய்முறை: முதலில் பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு, மிக்ஸியில் நறுக்கிய பிரட் துண்டு, வால்நட், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அடுத்து தனியாக மைதா, சோளமாவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பின்பு சிக்கனை மாவில் முக்கி எடுத்து பிறகு வால்நட் பிரட் கிரும்பஸில் பிரட்டி வைத்து கொள்ளவும்.
இறுதியாக கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சிக்கன் டென்டெர்ஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -