Walking Benefits : தினமும் நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்..
அனுஷ் ச | 29 Aug 2024 01:02 PM (IST)
1
தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும் போது 245 கலோரிகளை எரிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
2
தினமும் அதிகாலையில் எழுந்து நடக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து, உடல் பருமன் ஆவதை தடுக்கலாம்.
3
நடைப்பயிற்சி செய்யும் போது கலோரிகள் எரிக்கப்படுவதால் இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவு குறையலாம். இதனால் இரத்த சர்க்கரை குறைவதாக சொல்லப்படுகிறது.
4
தினசரி தொடர்ச்சியாக நடைப்பயிற்சி செய்யும் போது இதயம் மற்றும் தசைகள் வலுவாகும். இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்ற அபாயம் குறையலாம்
5
நடைப்பயிற்சி இரத்தத்தில் இருக்கக்கூடிய LDL மற்றும் டிரைகிளிசரைடு போன்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க உதவலாம்.
6
அதிக இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினசரி நடைப்பயிற்சி செய்யும் போதும் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கலாம்.