Beauty Tips : பார்லர் போக வேண்டாம்.. முகத்தை இளமையாக வைக்க இது போதும்!
அனுஷ் ச | 28 Aug 2024 12:55 PM (IST)
1
2 டீஸ்பூன் அரசி மாவு, 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவும், காய்ந்த பின் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்
2
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மீதமான சூட்டில் காய்ச்சி கொள்ளவும். அதன் பிறகு குளிக்கும் முன் கண்கள் கீழே மசாஜ் செய்து கழுவினால் கருவளையங்கள் நீங்கலாம்.
3
எலுமிச்சை பழச்சாறு, பாசி பருப்பு மாவு சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பார்க்க இளமையாக இருக்கும்
4
இரவில் கசகசாவை பாலில் ஊறவைத்து காலையில் பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் சிவப்பழகை பெறலாம்.
5
வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழத்தின் தோல்களை தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகம் பிரகாசமாகும்