Kari Dosai : மணமணக்கும் மதுரை ஸ்பெஷல் கறி தோசை.. எப்படி செய்வது?
Kari Dosai : மதுரை ஸ்பெஷல் உணவுகளில் முக்கியமான ரெசிபி என்றால், அது இந்த மதுரை கறி தோசைதான்.
Continues below advertisement

கறி தோசை
Continues below advertisement
1/6

தேவையான பொருட்கள் : எண்ணெய், வெங்காயம் - 2 , பச்சை மிளகாய் - 2 , தக்காளி - 2 , இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, கல் உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லி தூள் - 2 தேக்கரண்டி, சீரகம் தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி, மட்டன் கீமா 500 கிராம், தண்ணீர், தோசை மாவு.
2/6
செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
3/6
அடுத்தது இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, கல் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும்.
4/6
அடுத்தது மட்டன் கொத்துக்கறி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் கடாயை மூடி வைத்து வேக வைக்கவும்.
5/6
கறி வெந்ததும், கொத்தமல்லி இலை தூவிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி எடுத்து வைத்து கொள்ளவும். அடுத்தது ஒரு கிணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்
Continues below advertisement
6/6
அடுத்தது தோசை கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் கலக்கி வைத்த முட்டையை ஊற்றவும். அதன்பின் மட்டன் கீமா மசாலாவை தோசையின் மேல் பரப்பி விட்டு கொத்தமல்லி , மிளகுத்தூள் தூவிவிட்டு இருபுறமும் நல்ல சிவக்கும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான மதுரை கறி தோசை தயார்.
Published at : 29 Aug 2024 11:23 AM (IST)
Tags :
South Indian Recpies