✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vinayagar Chathurthi 2024:விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தயாரா?வீட்டை அலங்கரிக்க டிப்ஸ்!

ஜான்சி ராணி   |  05 Sep 2024 07:52 PM (IST)
1

விநாயகர் சதுர்த்தி வந்தாச்சு...கொண்டாட்டம்தான். மோதகப் பிரியன், பிள்ளையார், விநாயகர் என அழைக்கப்படுபவருக்கு கொழுக்கட்டையும் சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடப்படும் நாள் பிள்ளையார் சதுர்த்தி. பண்டிகை நாளில் வீட்டில் உள்ள மலர்கள், காகிதம் வைத்து அழகாக வீட்டை அலங்கரித்துவிடலாம். வீடு முழுக்க விளக்கு ஏற்றி விளக்கு ஒளியில் வீட்டை மின்ன செய்யலாம்.

2

விநாயகர் சதுர்த்தி நாளில் உடல் ஆரோக்கியம் மிக்க உணவுகளை செய்யலாம். கொழுக்கட்டையில் எள் பூரணம் செய்வதோடு மட்டும் அல்லாமல், அதில் முந்திரி, பாதாம் உள்ளிட்டவற்றை சேர்க்கலாம். உங்களுக்குப் பிடித்த இனிப்பு உணவுகளை செய்து அசத்தலாம். பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம், வாசனை எண்ணெய்களால் விநாயகரைக் குளிப்பாட்டி அலங்கரித்து பாசுரங்கள் மந்திரங்கள் ஓதி வணங்குவர்.

3

பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கலாம். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை விநாயகர் சிலை செய்ய சொல்லலாம். அவர்களுக்கும் ஊக்கமளிக்கும் விதமாகவும் இருக்கும். உங்கள் பிள்ளைகள் செய்த சிலைக்கு பூஜை செய்த மகிழ்ச்சியும் கிடைக்கும். விநாயகர் வைக்க போகும் மேஜையை அழகான துணி வைத்து அதன் மேல் விநாயகர் சிலையை வைக்கலாம். அட்டைப் பெட்டி இருந்தால் அதில் கோயில், கோபுரம் என செய்து அதற்குள் விநாயகர் சிலையை வைக்கலாம்.

4

மலர்கள் கொண்டு அலங்கரிக்கலாம். குறைந்த ஒளி தரக்கூடிய விளக்குகளை (சீரியல் லைட்ஸ்) பயன்படுத்துவது இன்னும் அழகு சேர்க்கும். இந்த விளக்குகள் உங்கள் வீட்டில் ஒரு இடத்தில் வைத்துவிட்டால் உங்களுக்கு தேவைப்படும் போது அதை எரியவிடலாம். மனதிற்கு ரிலாக்ஸாக இருக்கும். வீடுகளில் பூக்களை மாலைகளாக கோர்த்து அலங்கரிக்கலாம்.

5

அட்டைப் பெட்டிகள் இருந்தால் அதில் ஓம் என்ற வடிவத்தை உருவாக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் இதை செய்ய சொன்னால அவர்களுக்கும் புத்துணர்ச்சியாக மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

6

பொங்கல், தீபாவளிக்கு மட்டுமல்ல விநாயகர் சதுர்த்திக்கும் ரங்கோலி சிறப்பான அலங்கரமாக இருக்கும். பிரதான நுழைவாயில், பூஜை அறை ஆகிய இடங்களில் பல வண்ண நிறங்களைக் கொண்டு பெரிய அளவிலான ரங்கோலிகளை வரையலாம். ரங்கோலியை மேலும் பிரகாசமாக்க பூக்கள் அல்லது விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கலாம். 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Vinayagar Chathurthi 2024:விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தயாரா?வீட்டை அலங்கரிக்க டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.