Valentines week 2023 : ரோஸ் தினம் முதல் காதலர் தினம் வரை..இந்த வாரம் காதலர் வாரம்!
காதலர்களின் ஸ்பெஷல் வாரத்தின் முதல் நாளில், ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காதலுக்கு உகந்த ரோஜா பூவை, அவரவர்களின் காதலர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். இந்நாள் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிப்ரவரி 8 ஆம் தேதியன்று, மனதிற்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்த ப்ரபோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 9 ஆம் தேதியன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பை பரிமாற்றிக்கொள்ளும் விதமாக, சாக்லேட் கொடுக்கப்படுகிறது.
பிப்ரவரி 10 ஆம் தேதியன்று, டெடி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், க்யூட்டான கரடி பொம்மைகள் பரிசாக கொடுக்கப்படுகிறது.
பிப்ரவரி 11 ஆம் தேதியன்று, என்னை விட்டு நீ போனாலும், உன்னை விட்டு நான் போமாட்டேன்.. என்று காதலர்கள், மாற்றி மாற்றி சத்தியம் செய்து கொள்வார்கள். இந்நாளுக்கு ப்ராமிஸ் தினம் என்று பெயர்.
பிப்ரவரி 12 ஆம் தேதியன்று, ஹக் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் இருவரும் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.
பிப்ரவரி 13 ஆம் தேதியன்று, கிஸ் தினம் கொண்டாடப்படுகிறது. காமத்தை தாண்டிய பேரன்பை வெளிப்படுத்தும் விதமாக, முத்தம் கொடுக்கப்படுகிறது.
இறுதியாக இந்த காதலர்களின் ஸ்பெஷல் வாரம், காதலர் தினத்தன்று முடிவடையும். இது பிப்ரவரி 14 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -