Vadapav : உலகின் சிறந்த சாண்ட்விச் பட்டியலில் 13வது இடத்தை பெற்ற இந்தியாவின் வடா பாவ்!
மும்பையில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் உணவில் வடா பாவும் ஒன்று. மும்பை வாசிகளுக்கும் வடபாவுக்கும் நெருக்கமான உறவு உண்டு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேநீர் இடைவெளி, காலை உணவு, மதிய உணவு என அனைத்து நேரத்திலும் சாப்பிடக் கூடிய ஒன்றாக வடா பாவ் இருக்கிறது.
தெருக்கடையில் இருந்து சொகுசு உணவகங்கள் வரை இந்த வடா பாவ் கிடைக்கும்.
இந்நிலையில், உலகின் சிறந்த 50 சாண்ட்விச்கள் பட்டியலில் வடா பாவ் இடம் பிடித்துள்ளது.
டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள 50 சிறந்த சாண்ட்விச்களின் பட்டியலில் இந்தியாவின் வடா பாவ் 13வது இடத்தில் உள்ளது.
மேலும், துருக்கியின் டாம்பிக் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பெருவின் புட்டிஃபாரா சாண்ட்விச்சும், மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினாவின் டி லோமோ சாண்ட்விச் உள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -