Mosquitoes prevention : கொசுத்தொல்லை ரொம்ப ஓவராக இருக்கா..அப்போ இந்த செடிகளை வளருங்க!
எப்போதும் வெயில்காலத்தை தவிர்த்து, மற்ற காலங்களில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும். நீர்தேக்கம் இருக்கும் இடத்தில் எக்கச்சக்கமான கொசுக்கள் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொசுக்களை விரட்டி அடிக்க, பல நவீன கருவிகள் உள்ளது. இருப்பினும், அக்கருவிகளை எந்நேரமும் பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். கொசுக்களை ஒழிக்கும் முறைகளை கீழே காணலாம்.
சில செடிகளை வீட்டில் வளர்பதன் மூலம், கொசுக்களின் தொல்லையிலிருந்து நம்மால் விடுபடமுடியும். புதினா இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை பயன்படுத்தினால், கொசுக்களால் ஏற்படும் மலேரியா போன்ற நோய் படிப்படியாக குறையும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. புதினா எண்ணெயை நெஞ்சு பகுதியில் தடவலாம். இந்த எண்ணெயை நேரடியாக பயன்படுத்த கூடாது. சிறுது அளவு இந்த எண்ணெயை எடுத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
இத்தாலிய உணவுகளை சுவையூட்டும் ரோஸ்மேரியில் அற்புதமான பலன்கள் கொண்டது. இதில் உள்ள வாசனை கொசுக்களையும் மற்ற பூச்சிகளையும் அகற்ற உதவும்.
நறுமணமூட்டும் இயற்கை பொருட்களுள் ஒன்றான லாவெண்டர் கொசுக்களை விரட்டுகிறது. லாவெண்டரில், ஆண்டி ஃபங்கல் மற்றும் ஆண்டி பாக்டீரியா தன்மையும் உள்ளது.
எளிதில் வளரக்கூடிய, மேரி கோல்ட் பூக்கள் இயற்கையாகவே கொசுக்களை விரட்டும் தன்மையை கொண்டவை. இதில், தியோபீன் என்ற இரசாயனம் உள்ளது.
வீட்டில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் துளசி செடியை வளர்க்கலாம். வெளியூர் துளசியை கூட நீங்கள் வளர்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -