UTI Recovery : சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது?
சுத்தமின்மை காரணமாகவும், சுத்தமற்ற பொதுக்கழிவறையில் சிறுநீர் கழிப்பதாலும் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும்.
இது போன்ற சமயத்தில் காஃபின் கொண்ட காஃபி, குளிர் பானங்கள், மது, காரமான உணவுகள், அமிலத்தன்மை கொண்ட உணவுகள், செயற்கையான சர்க்கரை ஆகியவற்றை உட்கொள்ள கூடாது.
அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் : உடலில் நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர்ப்பையில் பாக்டீரியாக்கள் வளரும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை சுத்தமாகும். மேலும், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது.
சிறுநீர் கழிப்பது போன்ற எண்ணம் வந்தால், உடனடியாக கழிப்பறைக்கு செல்லவும். எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்
ஜீன்ஸ் போன்ற இறுக்கமான பேண்ட் வகைகளை அணிய வேண்டாம். உள்ளாடை ஈரமாகாமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும்.
நாள் ஒன்றுக்கு இரண்டு முறை, தாங்க கூடிய சூடு கொண்ட நீரை வைத்து பாதிக்கப்பட்ட இடத்தை கழுவவும்