Shallot Gravy : சின்ன வெங்காயம் இருந்தால் போதும்.. எச்சில் ஊறும் சுவையில் கிரேவி செய்யலாம்!
2 கப் சின்ன வெங்காயத்தை உறித்து, மிக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் கால் ஸ்பூன் வெந்தயம், 3 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து, பருப்பு சிவக்க வறுக்கவும்.
உரித்த 7 பூண்டு பல், ஒரு ஸ்பூன் சீரகம், 10 காய்ந்த மிளகாய், சிறிய துண்டு புளி சேர்த்து வதக்க வேண்டும். பின் இதை ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
மண் சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். பொரிந்ததும் சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும்.
பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள கலவையை இதில் சேர்த்து கலந்து விடவும்.
இப்போது இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான சின்ன வெங்காய கிரேவி தயார்.