Tuticorin macaroons : உங்கள் வீட்டில் சர்க்கரை, முந்திரி, முட்டை இருக்கா. அப்போ இதை செய்து பாருங்க!
தனுஷ்யா | 27 Jan 2023 06:27 PM (IST)
1
இனிப்பு சுவைக் கொண்ட மக்ரூன் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தின் பிரபலமான திண்பண்டமாகும்
2
இதனை தயாரிப்பது என்பதே தனிக்கலை. கண்டிப்பாக குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்
3
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்
4
க்ரீம் பதம் வரும் வரை கிளறி பொடியாக்கப்பட்ட முந்திரியை சேர்க்கவும்
5
கோன் வடிவத்தில் சுற்றப்பட்ட பட்டர் பேப்பரில் இந்தக் கலவையை எடுத்து வடிக்க வேண்டும்
6
இந்த இனிப்பை குறைந்த வெப்பநிலையில் 8 மணி நேரம் வேக வைக்க வேண்டும்
7
சரியான பக்குவத்தில் கலந்தால் மட்டுமே மக்ரூன் சுவையாக வரும்
8
மக்ரூனை 3 மாதங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்
9
வெள்ளைக்கருவும், முந்திரியும் இருப்பதால் உடலுக்கு புரதச் சத்து கிடைக்கிறது
10
இது உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது