Watermelon: முக சருமம் மிருதுவாக இருக்கணுமா? தர்பூசணியை இப்படி பயன்படுத்துங்க போதும்!
சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது நம்முடைய கடமை. இந்த பருவமழை தொடங்கவிருக்கும் சமயத்தில் தர்பூசணி எப்படிப்பட்ட நன்மைகளை வழங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவையான தர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் எ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைத்து மீண்டும் வராமலும் தடுக்கும்.
அலர்ஜியை எதிர்த்து போராடி தீர்வுக்கு வழி வகுக்கும். தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் மட்டுமின்றி சருமத்தில் மேல் பூச்சாக பயன்படுத்தும் போதும் பல நன்மைகளை கொடுக்கும்.
சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து ஃப்ரீ ரேடிக்கல் பாதுகாப்பையும் வழங்குகிறது. தர்பூசணி முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய செய்து சருமத்தை சீராக்கும். உங்களின் தினசரி உணவில் தர்பூசணியை சேர்த்து கொள்ளுங்கள்.
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அரை கப் பழச்சாறில் சிறிது ரோஸ் வாட்டர் தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து அதை முகத்திற்கு டோனராக பயன்படுத்துங்கள். மசித்த தர்பூசணி துண்டுகளுடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பச்சை பால் சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இது உங்கள் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும்.
தர்பூசணி தோலை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக அரைத்து கொள்ளவும். அதனுடன் சில துளிகள் எலுமிச்சை பழத்தின் சாறுகளை சேர்த்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரிஸ் செய்து வைத்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையான போது உதவும். தர்பூசணி சாறுடன் முல்தானி மட்டி சேர்த்து நன்றாக குழைத்து கண்களுக்கு அடியில், கழுத்து பகுதி, முகம் போன்ற இடங்களில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெரும்