Oreo Cake Recipe : கிறிஸ்துமஸிற்கு சூப்பரான ஓரியோ கேக் சுலபமா செய்யலாம்..ரெசிபி இதோ..!
தேவையான பொருட்கள் : கேக் செய்ய : ஓரியோ பிஸ்கட் - 120 கிராம் (3 பாக்கெட்), சர்க்கரை - 1/2 கப், மைதா - 3/4 கப், பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி, பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி, உருக்கிய உப்பில்லாத வெண்ணெய் - 1 கப் (250 மில்லி), காய்ச்சி ஆறிய பால் - 1 கப். ஓரியோ கிரீம் ப்ரோஸ்டிங் செய்ய : உப்பில்லாத வெண்ணெய் - 200 கிராம், ஓரியோ கிரீம். சாக்லேட் கனாஷ் செய்ய : பிரெஷ் கிரீம் - 200 மில்லி, டார்க் ஸ்வீட் சாக்லேட் - 250 கிராம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஓரியோ பிஸ்கட் மற்றும் கிரீமை தனி தனியாக பிரிக்கவும். ஓரியோ பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து, பாத்திரத்திற்கு மாற்றவும். இதில் சர்க்கரை, மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சேர்த்து கிளறவும்.
அடுத்து உருக்கிய வெண்ணெய் மற்றும் பால் சேர்த்து கிளறவும். இதை 1 நிமிடம் நன்கு பீட் செய்து கேக் டின்னில் ஊற்றவும்.
ஓவனை 180°C அளவிற்கு 15 நிமிடம் சூடாக்கி, கேக் டின்னை வைக்கவும். கேக்கை 180°C அளவிற்கு 1 மணி நேரம் பேக் செய்யவும்.வேறு பாத்திரத்தில், உப்பில்லாத வெண்ணெய் மற்றும் ஓரியோ கிரீம் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
கடாயில் பிரெஷ் கிரீம் மற்றும் டார்க் ஸ்வீட் சாக்லேட் சேர்த்து கிண்டவும். சாக்லேட் உருகியதும், எடுத்து வைக்கவும்.கேக் மீது பட்டர் கிரீம் ப்ரோஸ்டிங் தடவி கிரீம் மீது மற்றோரு கேக்கை வைத்து, பட்டர் கிரீம் ப்ரோஸ்டிங் தடவவும்.
பிறகு கேக் மீது, சாக்லேட் கனாஷ் ஊற்றவும். அவ்வளவு தான் அசத்தலான ஓரியோ பிஸ்கட், மற்றும் பட்டர் கிரீம் ப்ரோஸ்ட்டிங் வைத்து கேக்கை அலங்கரிக்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -