Chilli Tofu Recipe : சிக்கனின் சுவையை மிஞ்சும் சில்லி டோஃபு ரெசிபி!
தேவையான பொருட்கள் : டோஃபு - 200 கிராம், எள் எண்ணெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, கேப்சிகம் - 1/2., சோயா சாஸ் - 1 டீஸ்பூன், ரெட் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன், தக்காளி கெட்ச்அப் - 1 டீஸ்பூன், வினிகர் - 1 டீஸ்பூன், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 1/2 கப், சோள மாவு - 1 டீஸ்பூன், தண்ணீர், ஸ்பிரிங் ஆனியன் .
முதலில், டோஃபு துண்டுகளை சிவப்பு மிளகாய் சாஸ், சோயா சாஸ், உப்பு மற்றும் மிளகு சேர்த்து மாரினேட் செய்யவும்
டோஃபு துண்டுகள் மேரினேட் ஆனவுடன், துண்டுகளை பொன்னிறமாகும் வரை வறுத்து அவற்றைத் தனியாக வைக்கவும்.
ஒரு கடாயை சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், கேப்சிகம் மற்றும் சின்ன வெங்காயத்தை வதக்கவும்.
அதில் சாஸ்களைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு சோள மாவை சிறிது தண்ணீரில் கலந்து கடாயில் சேர்க்கவும்.
வறுத்த டோஃபு துண்டுகளை சேர்த்து கலந்து சிறிது நேரம் வேகவிட்டு நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியனால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.