Suraikai Paratha Recipe : சத்துக்கள் நிறைந்த சுரைக்காய் பராத்தாவை இன்றே செய்து பாருங்கள்!
தேவையான பொருட்கள் : சுரைக்காய் - 1, கோதுமை மாவு - 2 கப், பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு துருவியது, உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, ஆம்சூர் தூள் - 1 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்), கசூரி மேத்தி - 1 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை - 1 மேசைக்கரண்டி, எண்ணெய், நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் சுரைக்காயை கழுவி சுத்தம் செய்யவும். தோலை உரித்து, காயை துருவவும். பின் ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய சுரைக்காயை எடுத்து கொள்ளவும்.
பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், கரம் மசாலா தூள், ஓமம், கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
அடுத்து கோதுமை மாவை தேவையான அளவு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசையவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருவாக்கவும்.
மாவு உருண்டைகளை ரொட்டிகளாக உருட்டி, சிறிது நெய் விட்டு தவாவில் இருபுறமும் வேகவைக்கவும். சுவையான சுரைக்காய் பராத்தா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -