Sprouted Green Gram Dosa : சத்துகள் நிறைந்த ஆந்திரா ஸ்டைல் முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை..இன்றே செய்யுங்க!
தேவையான பொருட்கள் : பச்சைப்பயிறு - 1 கப், பச்சரிசி - 50 கிராம் (1 மணிநேரம் ஊறவைத்தது), பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கல் உப்பு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு, தண்ணீர், நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் பச்சைப்பயிரில் தண்ணீர் ஊற்றி 12 மணிநேரம் ஊறவிட்டு பின்பு தண்ணீரை வடிகட்டி பயிரை துணியில் கட்டி 12 மணிநேரம் வைக்கவும்.
அடுத்து அரிசியை 1 மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் ஊறவைத்த பச்சை பயறு சேர்த்து தண்ணீர் இன்றி அரைக்கவும்.
பின்பு மாவை பாத்திரத்திற்கு மாற்றி அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
பிறகு தோசைக்கல்லை சூடு செய்து அதில் மாவை ஊற்றி தேய்க்கவும். பின்பு சுற்றிலும் நெய் ஊற்றி தோசை வெந்ததும் சூடாக பரிமாறவும்.
அவ்வளவு தான் மொறு மொறு பச்சைப்பயறு தோசை தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -