Golden Sunshine Turmeric: தினமும் டயட்டில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் இருக்கட்டும் - எவ்வளவு நல்லது தெரியுமா?
உணவில் தினமும் ஏன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் சேர்த்துகொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை காணலாம்.
செரிமானத்திற்கு மஞ்சள் உதவுகிறது. மஞ்சள் உடலில் bile உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் கொழுப்புகளை கரைத்து செரிமானத்தை துரிதப்படுகிறது.
மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.
மஞ்சளில் உள்ள ’Curcumin’ மூளையின் செயல்திறனை அதிகரித்து காக்னிடிவ் செயல்திறனை அதிகரிக்கிறது. தினமும் ஒரு டீஸ்பூன் மஞ்சளை உங்கள் டயட்டில் இருப்பது மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.
நமது தவறாக உணவுமுறைகளால் அதிகமாக பாதிக்கப்படுவது கல்லீரல். ஒரு டீஸ்பூன் மஞ்சள் உணவில் இருப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உணவும் தினமும் மஞ்சள் இருக்கட்டும். பாலில் மஞ்சள் சேர்த்து சாப்பிடலாம். மஞ்சள் டீ, மஞ்சள் க்ரீன் டீ என நிறைய ஆப்சன் இருக்கிறது.