Chocolate Sundae Recipe : அசத்தலான சாக்லேட் சண்டே ரெசிபி..இன்றே வீட்டில் செய்யுங்கள்..!
தேவையான பொருட்கள் : பிரெஷ் கிரீம் - 1/2 கப், செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் - 200 கிராம், முழு கொழுப்புள்ள பால் - 1 கப், சாக்லேட் ப்ரௌனி, வால்நட்ஸ், பாதாம், முந்திரி நறுக்கியது, ஒரியோ பிஸ்கட், சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா ஐஸ் கிரீம், சாக்லேட் வெபர், ஸ்டிக்ஸ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் சாக்லேட் கனாஷ் செய்ய பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், மற்றும் செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் சேர்த்து கரையும் வரை குறைந்த தீயில் கிண்டவும். சாக்லேட் முழுவதும், உருகியதும், எடுத்துவைக்கவும்.
சாக்லேட் மில்க் ஷேக் செய்ய, மிக்ஸ்சியில் பால் மற்றும் சிறிதளவு சாக்லேட் கனாஷ் ஊற்றி அடிக்கவும் .சாக்லேட் ப்ரௌனி ' யை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கிளாஸ்'ஸில், சாக்லேட் ப்ரௌனி, சாக்லேட் கனாஷ், நறுக்கிய வால்நட்ஸ், பாதாம், முந்திரி, ஒரியோ பிஸ்கட், போடவும். இதன் மேல் சாக்லேட் மில்க் ஷேக் ஊற்றவும்.
பின் வெண்ணிலா ஐஸ் கிரீம் போடவும். இதன் மேல் சாக்லேட் ப்ரௌனி, சாக்லேட் கனாஷ், நறுக்கிய வால்நட்ஸ், பாதாம், முந்திரி, ஐஸ் கிரீம் வைக்கவும்.
பின் சாக்லேட் கனாஷ், நறுக்கிய வால்நட்ஸ், பாதாம், முந்திரி வைக்கவும்.இறுதியாக சாக்லேட் வெபர் ஸ்டிக்ஸ் வைக்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -