Olive Oil Hair Care: ஆலிவ் ஆயில் தடவி பாருங்க! பொடுகு இருந்த இடம் தெரியாம ஓடிடும்!
ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மயிர்கால்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
அது மட்டுமின்றி ஆலிவ் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
தலையில் வறட்சி, ஈஸ்ட் வளர்ச்சி மற்றும் மோசமான முடி பராமரிப்பு மற்றும் அளவுக்கு அதிகமாக முடி பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பொடுகு ஏற்படுகிறது.
ஆலிவ் எண்ணெயோடு பாதாம் எண்ணெய் சேர்த்து தடவி வந்தால் பொடுகு குறையும். ஆலிவ் எண்ணையில் எலுமிச்சை கலந்து தடவினாலும் பொடுகு குறையும்.
ஸ்ப்ளிட் எண்ட்ஸ் இருப்பின் அதை சரி செய்கிறது. ஆலிவ் எண்ணெயில் இருக்கும் நிறைவுறா கொழுப்பு முடியை வளர்க்க உதவுகிறது. கண்டிஷனராகவும் அதை பயன்படுத்தலாம்.
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.