Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Gongura Pachadi : சத்துக்கள் நிறைந்து இருக்கு.. கோங்குரா பச்சடி..சுவையா எப்படி செய்யலாம்?
தேவையான பொருட்கள் : எண்ணெய், முழு தனியா - 1 மேசைக்கரண்டி), சீரகம் - 1 மேசைக்கரண்டி, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 15, புளிச்ச கீரை - 2 கட்டு, பூண்டு - 3 பற்கள், உப்பு - 1 தேக்கரண்டி. தாளிக்க : எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, கடுகு - 1/4 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, பூண்டு துண்டுகள், பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் கடாயில் என்னை ஊற்றி, முழு தனியா, சீரகம், வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே கடாயில், எண்ணெய் ஊற்றி, புளிச்ச கீரையை வதக்கி எடுத்து வைக்கவும் .
மிக்ஸியில், வறுத்த பொருட்கள், பூண்டு, வதக்கிய கீரை போட்டு அரைக்கவும்.
தாளிக்க கொடுக்க பட்டுள்ள பொருட்களை தாளித்து புளிச்ச கீரை கலவையை போட்டு வதக்கி இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான கோங்குரா பச்சடி தயார். இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -