Macaroni Recipe : கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த மேக்ரோனியை செய்து கொடுங்க!
இந்தியன் ஸ்டைல் மேக்ரோனி செய்ய தேவையான பொருட்கள் : மேக்ரோனி - 1 கப், வெங்காயம் - 2 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, பச்சை குடைமிளகாய் - 1/2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, வெங்காயத்தாள் - 1/2 கப், சமையல் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, தக்காளி கெட்சப் - 1 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தியன் ஸ்டைல் மேக்ரோனி செய்முறை விளக்கம் : சூடு தண்ணீரில் மேக்ரோனியுடன் சிறிது உப்பு சேர்க்கவும். இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க கொஞ்சம் எண்ணெய் சேர்க்கவும்.வேகவைத்த பின் இதை வடிகட்டி, எடுத்து வைக்கவும்.
அகல கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து இதில் வெங்காயம், பச்சை குடைமிளகாய், சேர்த்து வதக்கவும்.இதில் தக்காளி, மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளி கெட்சப், வெங்காயத்தாள் சேர்க்கவும். இறுதியாக இதில் வேகவைத்த மேக்ரோனி சேர்க்கவும்.நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
வேண்டுமென்றால் இறுதியில் முட்டை உடைத்து ஊற்றலாம். முட்டை சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -