Egg Bhejo Recipe : பர்மா ஸ்டைலில் காரசாரமான முட்டை பேஜோ ரெசிபி..இன்றே செய்யுங்க!
தேவையான பொருட்கள் : எண்ணெய், வெங்காயம் - நீளமாக நறுக்கியது, பூண்டு - நீளமாக நறுக்கியது, காய்ந்த சிவப்பு மிளகாய் - 10 , வேகவைத்த முட்டை, உப்பு கரைத்த தண்ணீர், எலுமிச்சை தண்ணீர், புளி தண்ணீர், கொத்தமல்லி இலை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் முட்டை பேஜோ செய்ய, ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும். காய்ந்த மிளகாய் ஆறிய பின் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை பொடித்து போடவும். இதனுடன் பொரித்த வெங்காயம், அரைத்த காய்ந்த மிளகாய் பொடியை தேவையான அளவு கலந்து வைக்கவும்.
முட்டையை வேக வைத்து தோலுரித்து எடுத்து வைக்கவும். வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்.
இதன்மேல் எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் ஊற்றவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் ஊற்றவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -