Chocolate Chip Cookies Recipe : கிறிஸ்துமஸுக்கு அசத்தலான ப்ரெட் குக்கீஸ்..உடனே ட்ரை செய்யுங்கள்..!
தேவையான பொருட்கள் : மைதா - 1 கப், பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, உப்பில்லாத வெண்ணெய் - 125 கிராம், சர்க்கரை - 3/4 கப், வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, முட்டை - 1, பிரட் தூள், சாக்லேட் சிப்ஸ் - 1/2 கப், வால்நட்ஸ் - 1/2 கப் நறுக்கியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர்'ரை, பாத்திரத்தில் சலித்து வைக்கவும்.டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
மற்றோரு பாத்திரத்தில், வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
இதில் முட்டையும் சேர்த்து பீட் செய்யவும். பிறகு இதில் மாவு கலவை, பிரட் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
அடுத்து இதில் சாக்லேட் சிப்ஸ், மற்றும் வால்நட்ஸ் சேர்த்து கிளறவும். இவற்றை சிறிய உருண்டைகளாக உருட்டி பேக்கிங் தட்டில் வைக்கவும்.
ஓவனை 180°C அளவில் 15 நிமிடம் சூடாக்கவும். குக்கீஸை 180°C அளவில் 20 நிமிடம் பேக் செய்யவும். சுவையான பிரட் குக்கீஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -