Sheer Khurma : இஃப்தாருக்கு டக்குனு ஒரு ஸ்வீட் செய்யனுமா..? இந்த ஷீர் குருமா செய்யுங்கள்!
தேவையான பொருட்கள் : முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர், சேமியா - 1/3 கப், பேரிச்சம் பழம் - 10, முந்திரி பருப்பு - 1/4 கப் நறுக்கியது, பாதாம் பருப்பு - 1/4 கப் மெல்லியதாக நறுக்கியது, பிஸ்தா - 2 மேசைக்கரண்டி நறுக்கியது, சாரை பருப்பு - 1 மேசைக்கரண்டி, காய்ந்த திராட்சை, சர்க்கரை - 1/4 கப், ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி, ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு, நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் கடாயில் நெய் ஊற்றி அதில் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து அதே கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய பேரிச்சம் பழம் சேர்த்து 3 நிமிடம் வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய முந்திரி பருப்பு, பாதாம், பிஸ்தா, சாரை பருப்பு சேர்த்து 4 நிமிடம் மிதமான தீயில் வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும். பின்பு அதே கடாயில் நெய் ஊற்றி அதில் காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து நல்ல அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் வறுத்த சேமியாவை சேர்த்து கலந்துவிடவும். சேமியா வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்பு ஏலக்காய் தூள், ரோஸ் எசென்ஸ், வறுத்த பேரிச்சம் பழம் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து வறுத்த பருப்பு மற்றும் திராட்சையை சேர்த்து கலந்துவிட்டு 3 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
அவ்வளவு தான் சுவையான ஷீர் குருமா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -