Whole Moong Dal Curry : சாதம், சப்பாத்திக்கு அசத்தலான சத்துகள் நிறைந்த சைட் டிஷ்..பச்சைப்பயறு கறி ரெசிபி!
தேவையான பொருட்கள் : பச்சைப்பயறு - 1/2 கப், தண்ணீர், மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 1/2 தேக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு - 1 தேக்கரண்டி இடித்தது, தக்காளி - 3 பொடியாக நறுக்கியது, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: பச்சைப்பயிரை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறவைத்த பச்சைப்பயிரை பிரஷர் குக்கரில் போட்டு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பிறகு ஒரு கடாயில், நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். இதனுடன் சீரகம், பெருங்காயதூள் சேர்த்து கிளறவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு இடித்த இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து கிளறி பின் தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
அடுத்து வேகவைத்த பச்சைப்பயிரை கடாய்க்கு மாற்றி தண்ணீர் மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து சுமார் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
இறுதியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து விடவும். ஆரோக்கியமான மற்றும் சுவையான பச்சைப்பயறு கறியை மேலே ஒரு துளி நெய்யுடன் சூடாகப் பரிமாறவும்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -