Paneer Bread Pakora Recipe : மாலை நேர பசியை போக்க இந்த சுவையான பனீர் ப்ரெட் பகோராவை செய்யுங்க!
மாவு செய்ய : கடலை மாவு - 1 1/2 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு ஏற்ப மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1 தேக்கரண்டி, தண்ணீர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரெட் பன்னீர் பக்கோடா செய்ய : பிரெட் துண்டு - 2, பன்னீர் - 200 கிராம், புதினா கொத்தமல்லி சட்னி,புளி பேரீச்சம்பழம் சட்னி
புளி பேரீச்சம்பழம் சட்னி செய்முறை : முதலில் 10 பேரிச்சம்பழங்களை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிறகு ஒரு பேனில் சிறிது தண்ணீர் ஊற்றி பேரிச்சம்பழங்களை அதனுள் போடவும்.5 நிமிடங்கள் கழித்து அதனுள் புளி கரைசலை ஊற்றி கொள்ளுங்கள்.இரண்டு நிமிடங்கள் கழித்து, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி, இஞ்சி தூள் -1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தூள் வெல்லம் - 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் அந்த கலவையில் சேர்த்து கொள்ளவும்.இந்த கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் விட்டால் புளி சட்னி தயார்.
ஒரு கிண்ணத்தில், கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், ஓமம் போடவும். இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கலக்கவும். கரைத்த மாவு பஜ்ஜி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும். அடுத்து பன்னீரை கனமான துண்டாக வெட்டவும்.
இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்து, ஒன்றில் புதினா கொத்தமல்லி சட்னி தடவவும். அதன் மேல் பன்னீர் துண்டை வைக்கவும். மற்றோரு பிரெட் துண்டில், பேரிச்சம்பழம் புளி சட்னி தடவி, பன்னீரை மூடவும். செய்த சான்விச்சை நான்கு துண்டுகளாக நறுக்கவும்.
பொரிப்பதற்கு எண்ணையை சூடு செய்யவும். வெட்டியா சான்விச் துண்டை மாவில் முக்கி, எண்ணெயில் போட்டு, மிதமான சூட்டில், பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.பிரெட் பன்னீர் பகோடா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -