✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Corn Pulao : அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி..இந்த சோள புலாவை இன்றே செய்திடுங்கள்!

சுபா துரை   |  05 Mar 2024 11:18 PM (IST)
1

தேவையான பொருட்கள் : சோள முத்துகள் - 180 கிராம், நெய் - 2 மேசைக்கரண்டி, ஏலக்காய் - 3, பட்டை - 1 துண்டு, கிராம்பு - 4, அன்னாசிப்பூ - 1, சீரகம் - 1/2 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தட்டியது, உப்பு - 1 தேக்கரண்டி, பாஸ்மதி அரிசி - 1 கப், நீர் சேர்த்த தேங்காய் பால் - 1 கப்

2

செய்முறை : முதலில் பிரஷர் குக்கரில் தண்ணீர் ஊற்றி, சோள முத்துக்களை போட்டு 2 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும். பிறகு பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும்.

3

அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் இதில் தட்டிய இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

4

வேக வைத்த சோள முத்துக்களை வடிகட்டி வெங்காயத்துடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும்.

5

இதனுடன் பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறி, ஒரு கப் சிறிது நீர் சேர்த்து தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் வேகவைத்து வடிகட்டிய தண்ணீர் சேர்க்கவும்.

6

குக்கரை மூடி, ஆவி வந்ததும், வெயிட்டை போட்டு மிதமான சூட்டில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சோளம் புலாவ் தயார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Corn Pulao : அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி..இந்த சோள புலாவை இன்றே செய்திடுங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.