Chicken Frankie Recipe : மும்பை பேமஸ் சிக்கன் பிரான்கியை வீட்டிலே செய்வது எப்படி?
மசாலா விழுது செய்ய தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் - 5 நறுக்கியது, பூண்டு - 8 பற்கள், இஞ்சி - 1 நறுக்கியது, வெங்காயம் - 1/2 நறுக்கியது
சிக்கனை ஊறவைக்க : சிக்கன் - 300 கிராம், எலுமிச்சை சாறு - 1/2 பழம், அரைத்த மசாலா விழுது - 1 தேக்கரண்டி, கெட்டி தயிர் - 1/4 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி நறுக்கியது, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
ஃப்ராங்கி செய்ய : வறுத்த சில்லி சிக்கன் துண்டுகள், சப்பாத்தி புதினா சட்னி, வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது, குடைமிளகாய் - 1 மெல்லியதாக நறுக்கியது, கேரட் - 1 மெல்லியதாக நறுக்கியது, ஸ்பைசி மயோ
செய்முறை : மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.சிக்கனை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி, இதனுடன் எலுமிச்சை சாறு, அரைத்த மசாலா விழுது, கெட்டித் தயிர், மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு, சாட் பவுடர், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.(Photo Credits : Freepik/stockking)
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேக வைத்து எடுக்கவும்.(Photo Credits : Freepik/stockking)
ஸ்பைசி மயோ செய்ய, ஒரு சிறிய கிண்ணத்தில் மயோனைஸ் மற்றும் செஷுவான் பேஸ்ட் சேர்த்து கலந்து வைக்கவும்.அடுத்த செய்து வைத்த சப்பாத்தியில் புதினா சட்னி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், செய்த ஸ்பைசி மயோ மற்றும் வேக வைத்த சிக்கன் துண்டுகளை வைத்து ரோல் செய்ய வேண்டும். அவ்வளவுதான் சூப்பரான ஸ்ட்ரீட் ஸ்டைல் சிக்கன் பிராங்கி ரெடி..(Photo Credits : Freepik/ KamranAydinov)