Banana Paniyaram Recipe : தித்திக்கும் வாழைப்பழ பணியாரம்..இன்றே செய்யுங்கள்!
தேவையான பொருட்கள் : தண்ணீர் - 1/2 கப், வெல்லம் - 1/2 கப், வாழைப்பழம் - 5, ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, தேங்காய் துண்டுகள், கோதுமை மாவு - 1 கப் , அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி, நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் வெல்லப்பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை போட்டு கரைக்கவும். கரைந்த பின் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை போட்டு அதில் வெல்லப் பாகை வடிகட்டி சேர்த்து மசிக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய் துண்டுகள் போட்டு கலக்கவும்.
அடுத்து இதில் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் கலந்து, விழும் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பணியார சட்டியை சூடாக்கி, நெய் ஊற்றி, செய்த மாவு கலவையை சிறிதளவு ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ பணியாரம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -