Chettinad Vellai Paniyaram : நடிகர் விக்ரமுக்கு பிடித்த செட்டிநாடு வெள்ளை பணியாரம்.. செய்முறை விளக்கம் இதோ!
நடிகர் விக்ரம் சாமி படத்தில் இடம்பெறும் ‘திருநெல்வேலி அல்வா டா’பாடலை ஷூட் செய்ய காரைக்குடியில் தங்கியிருந்த போது, செட்டிநாடு வெள்ளை பணியாரத்தை முதன்முறையாக சாப்பிட்டுள்ளார். அப்போதிலிருந்து, விக்ரமின் ஃபேவரட்டான உணவுகளின் பட்டியலில், செட்டிநாடு வெள்ளை பணியாரமும் சேர்ந்து கொண்டது. அப்படிப்பட்ட செட்டிநாடு வெள்ளை பணியாரத்தின் ரெசிபியை இங்கு பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : பச்சரிசி - 1 கப், உளுந்து பருப்பு - 3/4 கப், தண்ணீர், உப்பு - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை: பச்சரிசி மற்றும் உளுந்து பருப்பு இரண்டையும் தனித்தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு இரண்டையும் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து ஊறவைத்த பச்சரி, உளுந்து பருப்பு இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு அரை கரண்டி மாவை எடுத்து கடாயின் நடு பகுதியில் ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். அவ்வளவுதான் செட்டிநாடு வெள்ளை பணியாரம் தயார். காரா சட்னியுடன் சூடான செட்டிநாடு வெள்ளை பணியாரத்தை பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -