Baby Corn Masala : சப்பாத்தி, பூரிக்கு அசத்தலான சைட் டிஷ்..பேபி கார்ன் மசாலா ரெசிபி!
தேவையான பொருட்கள் : பேபி கார்ன் - 400 கிராம், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 கீறியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி , தனியா தூள் - 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, தக்காளி விழுது - 3 பழம், தண்ணீர் - 2 கப், முந்திரி பருப்பு விழுது, கரம் மசாலா தூள் -1 தேக்கரண்டி, கசூரி மேத்தி , கொத்தமல்லி இலை நறுக்கியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் சூடான தண்ணீரில் நறுக்கிய பேபி கானை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். பின்பு வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்துவிடவும். பின்பு மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
வேகவைத்த பேபி கானை சேர்த்து தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். பின்பு கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, நறுக்கிய கொத்தமல்லிஇலை சேர்த்து கலந்து இறக்கவும்.
அவ்வளவு தான் சுவையான பேபி கார்ன் மசாலா தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -