Muskmelon Sharbat Recipe : உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் சூப்பரான முலாம்பழ சர்பத் செய்முறை இங்கே!
தேவையான பொருட்கள் : முலாம்பழம் - 1 பழம், பால் - 500 மிலி, கஸ்டர்ட் பவுடர் - 2 டீஸ்பூன், துளசி விதைகள் - 2 டீஸ்பூன், ஊறவைத்த பாதாம் பிசினி - 1 கப், சர்க்கரை - 1/4 கப், நட்ஸ் கலவை, வெண்ணிலா ஐஸ்கிரீம்
செய்முறை : 1 கப் பாதாம் பிசினியை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் துளசி விதைகளை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
250 மிலி பாலில், 2 டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கட்டி வராமல் நன்றாக கிளறவும். மீதி இருக்கும் 250 மிலி பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
பால் கொதிக்கும் போது கஸ்டர்ட் பவுடர் மிக்ஸை கலக்கவும்.கலவை திக் ஆனவுடன் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
முலாம்பழத்தின் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இதை கஸ்டர்ட் கலவையில் சேர்க்கவும்.
பின்னர், பாதாம் பிசினி, ஊற வைத்த துளசி விதை, நறுக்கிய நட்ஸை சேர்த்து கலக்கவும். பிரிட்ஜில் வைத்து எடுத்து, வெண்ணிலா ஐஸ்கிரீமுடன் பரிமாறவும்.