Coconut Milk Pudding : வீட்டில் தேங்காய் இருக்கா? சட்டுனு உடனே இந்த தேங்காய் பால் புட்டிங்கை செய்திடுங்கள்!
தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் - 1 கப், பிரெஷ் கிரீம் - 200 மில்லி, சர்க்கரை - 1/4 கப், சைனா க்ராஸ், வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி, சோள மாவு - 3 தேக்கரண்டி, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் மிக்ஸியில் தேங்காய் துருவல் போட்டு, கெட்டி தேங்காய் பால் எடுக்கவும். பிறகு பேனில் தண்ணீர் ஊற்றி, சைனா க்ராஸ் போடவும். சைனா க்ராஸ் கரைந்ததும் எடுத்து வைக்கவும்.
மற்றோரு பேனில் பிரெஷ் கிரீம் போட்டு, இதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். இதில் வெண்ணிலா எசென்ஸ் மற்றும் கரைத்த சோள மாவு சேர்த்து கிளறவும்.
அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் பால் சேர்க்கவும். தேங்காய் பால் கலவையை குறைந்த தீயில் சூடாக்கவும்.
தேங்காய் பால் கலவை கெட்டியானது, அடுப்பை அணைத்து, பரிமாறும் கப்பில் ஊற்றி, 4 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
அவ்வளவு தான் சுவையான தேங்காய் பால் புட்டிங் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -